அரசு பேருந்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள்

English Version

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை வரையறுக்கப்பட்டது

பாண்டியன் ரோடுவேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், (தற்போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், மதுரை 1971 சட்டத்தின்படி தனியார்களின் பேருந்துகள் தேசியமயமாக்கப்பட்டதன் காரணமாக 17.01.1972 முதல் நடைமுறைக்கு வந்தது. மதுரையில் உள்ள M/s சதர்ன் ரோடுவேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து 346 பேருந்துகள், டிப்போக்கள் மற்றும் வேலையாட்களுடன் எடுக்கப்பட்டது.

திறமையான பரவலாக்கம் மற்றும் சிறந்த நிர்வாகத்தைப் பாதுகாப்பதற்காக இந்த நிறுவனம் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. 01.01.1974 அன்று, திருநெல்வேலி பகுதியில் இயக்கப்பட்ட 106 பேருந்துகள் மாற்றப்பட்டு, கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம் (தற்போது TNSTC (திருநெல்வேலி) லிமிடெட், திருநெல்வேலி மண்டலம்) நாகர்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேலும் 62 பேருந்துகள் M/s சோழன் ரோடுவேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்,க்கு மாற்றப்பட்டு (தற்போது TNSTC (கும்பகோணம்) லிமிடெட், கும்பகோணம் மண்டலம்) கும்பகோணத்தை அதன் தலைமையகமாகக் கொண்டு 01.07.74 முதல் நடைமுறைக்கு வந்தன. இந்த இடமாற்றங்களுக்குப் பிறகு, இந்த கழகத்தின் பகுதி பிரிக்கப்படாத மதுரை, இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 3 வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கியது.

இந்த கழகத்தின் பேருந்துகளின் எண்ணிக்கை 1249 ஆக இருந்தபோது, இது 01.04.1983 அன்று பிரிக்கப்பட்டு 352 பேருந்துகள் M/s மருது பாண்டியர் போக்குவரத்துக் கழகம் லிமிடெட், (தற்போது TNSTC (கும்பகோணம்) லிமிடெட், காரைக்குடி மண்டலம்) நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. பிரிக்கப்படாத இராமநாதபுரம் மாவட்டம் , புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் மதுரை-அருப்புக்கோட்டை சாலையின் கிழக்குப் பகுதி உள்ளடக்கியது.

மீண்டும் 1097 பேருந்துகள் இருந்தபோது, இந்த கழகம் 01.04.1986 அன்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு, 446 பேருந்துகள் இராணிமங்கம்மாள் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (தற்போது TNSTC (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம்) திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு இயக்கத் தொடங்கியது. மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியையும், திண்டுக்கல்-பெரியகுளம்-குமுளி சாலையின் மேற்கேயும் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது.

தமிழ் நாடு அரசு பேருந்து இயங்கங்களை முறைப்படுத்த உத்தரவிட்டபொழுது 01.04.91 அன்று M/s மருதுபாண்டியர் போக்குவரத்துக் கழகம் லிமிடெட், (தற்போது TNSTC (கும்பகோணம்) லிமிடெட், காரைக்குடி மண்டலம்) அருப்புக்கோட்டை கிளை, தனது பேருந்து தடங்களுடன் இந்த போக்குவரத்துக் கழகத்திற்கு மாற்றப்பட்டவுடன் விருதுநகர் மாவட்டம் முழுவதும் இந்த கழகத்தின் செயல்பாட்டு அதிகார வரம்பிற்கு வந்தது.

மீண்டும் பேருந்துகளின் எண்ணிக்கை 1249 ஆக இருந்தபோது, 29.04.1997 தேதியிட்ட G.O MS No.100 இன் படி கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது, மேலும் புதிய கழகம் M/s வீரன் சுந்தரலிங்கம் டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் லிமிடெட், (தற்போது TNSTC (மதுரை) லிமிடெட்) விருதுநகர் மண்டலம் என்ற பெயரில் 01.05.97 முதல் அதன் செயல்பாட்டை விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு 352 பேருந்துகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் பாண்டியன் ரோடுவேஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற பெயர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை டிவிஷன் I ) லிமிடெட் என மாற்றப்பட்டது.

STU களின் ஒருங்கிணைப்பு
தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவின்படி 06.01.2004 முதல் மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகியவற்றை தனிதனியே தலைமை இடங்களாக கொண்டு இயங்கி வந்த 5 போக்குவரத்துக் கழகங்கள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) என்ற பெயரில் ஒரே கழகமாக மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இணைக்கப்பட்டது.

புதிதாக இணைக்கப்பட்ட கழகத்தின் செயல்பாட்டுப் பகுதியானது அந்தந்த 5 கழகங்கள் இணைக்கப்படுவதற்கு முன்பு ஏற்கனவே வைத்திருந்த செயல்பாட்டுப் பகுதியான மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் அடங்கும். இது தவிர, எங்கள் கழகம் கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருச்சி, தஞ்சை போன்றவற்றை உள்ளடக்கிய தமிழ்நாட்டின் மத்திய பகுதிகளுக்கு சேவை செய்கிறது, மற்றும் அருகிலுள்ள கேரள மாநிலத்துடன் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து செயல்பாட்டையும் கொண்டுள்ளது.

06.01.2004 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட கழகத்தின் மொத்த பேருந்துகளின் எண்ணிக்கை 3511 ஆக இருந்தது, பின்வரும் கழகத்திலிருந்து எடுக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை மதுரை-924, திருநெல்வேலி- 838, நாகர்கோவில்-678, திண்டுக்கல்-712 மற்றும் விருதுநகர்-359 ஆகும்.

G.O.Ms.No.274, போக்குவரத்து (T) துறை, 11.10.2010 தேதியின் படி த.நா.அ.போ.க (மதுரை) லிட்., மதுரையிலிருந்து த.நா.அ.போ.க (திருநெல்வேலி) லிட்., என்று புதிதாக பிரிக்கப்பட்டது. 01.11.2010 அன்று திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் மண்டலங்கள் மற்றும் விருதுநகர் மண்டலத்தின் கோவில்பட்டி மற்றும் செங்கோட்டை கிளைகளை த.நா.அ.போ.க (திருநெல்வேலி) லிட்க்கு மாற்றியது. இதன் மூலதனம், த.நா.அ.போ.வ.க கடன், அரசு உள்ளிட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் மற்றும் பிற கடன்கள், பணிக்கொடை, விடுப்புப் பொறுப்பு, மோட்டார் விபத்து இழப்பீடு மற்றும் பிற பொறுப்புகள் கணக்கியல் கொள்கையின் படி நிறுவனங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது, இதன் செயல்முறை குறித்து அரசால் ஒரு குழ அமைக்கப்பட்டு இரண்டு நிறுவனங்களுக்கு இடையே மாற்றப்பட வேண்டிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் மதிப்பு தீர்மானிக்கப்பட்டது. 31.10.2010 அன்று உள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குழவால் பரிந்துரைக்கப்பட்ட அடிப்படையில் கீழே வரும் சரத்துக்கள் நிறுவனங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
a) 31.10.2010 இன் புத்தக மதிப்பின்படி நிலையான மற்றும் நடப்புச் சொத்துக்கள்.
b) திரட்டப்பட்ட இழப்பு மற்றும் பொறுப்புகள் குறிப்பிட்ட மற்றும் அந்தந்த நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட அலகுகள் / பிராந்தியங்களுக்கு காரணம்.
c) அரசாங்கத்தால் கூடுதல் மூலதனம் அளிக்கப்பட்டதுடன் , 06.01.2004 அன்று இணைக்கப்பட்ட நேரத்தில் அந்தந்த நிறுவனத்தால் கொண்டு வரப்பட்ட மூலதனத்துடன் துவக்குதல்.
d) வங்கி மேல் வரை பற்று, வங்கி காலக் கடன், பல்வேறு கடன் வழங்குபவர்கள் போன்ற பொதுவான பொறுப்புகள், அதன் தன்மையைக் கருத்தில் கொண்டு பகிர்ந்தளிக்க முடியாதவை, த.நா.அ.போ.க (மதுரை) லிட்., ஆல் எடுக்கப்படுகிறது.
e) சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் மாற்றம் செய்வதினால் ஏற்படும் பற்றாக் குறையினை த.நா.அ.போ.வ.க யின் குறுகிய கால கடன், அரசாங்கத்தின் கடன் மற்றும் அரசாங்கம் வழங்கிய பலவகை முன்பணத்தால் சரிகட்டுதல் செய்தல்.

பேருந்து எண்ணிக்கை

சேவைகளின் வகை பேருந்துகளின் எண்ணிக்கை
நகரம் 1270
புறநகரம் 831
மலை 64
உதிரி 135
மொத்தம் 2300

இயக்குநர்கள் குழு உறுப்பினர்கள்

K.பனீந்திர ரெட்டி இ.ஆ.ப. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்து துறை
போக்குவரத்து கழகங்களின் தலைவர்
திரு. T.N.வெங்கடேஷ், இ.ஆ.ப., அரசு சிறப்பு செயலாளர், போக்குவரத்து துறை
திரு. K.P.கார்த்திகேயன், இ.ஆ.ப., ஆணையர் மதுரை மாநகராட்சி(மாறுதலாகி விட்டார்)
திரு. T.V.பிரேம் கோபால் துணை இயக்குநர், நிதி துறை
திரு. V.வெங்கடராஜன் இணை மேலாண் இயக்குநர், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதிக் கழகம்
திரு. S.S.ராஜ்மோகன் மேலாண் இயக்குநர், கும்பகோணம்
திரு. P.திருவம்பலம் பிள்ளை மேலாண் இயக்குநர், கோவை
திரு. R.மோகன் மேலாண் இயக்குநர், திருநெல்வேலி
திரு. R.பிரேம் குமார் தனிப்பட்ட இயக்குநர்
திரு. T.சரஸ்வதி தனிப்பட்ட மகளிர் இயக்குநர்
திரு. A.ஆறுமுகம் மேலாண் இயக்குநர், மதுரை

தொடர்பு விபரங்கள்

மேலாண் இயக்குநர்
91, பை பாஸ் சாலை,
TNSTC தலைமை அலுவலகம்,
மதுரை - 625010.
Contact : 0452-2381200
Email : tnstcmdu[at]gmail[dot]com
மண்டல விவரங்கள்
மண்டலம் முகவரி தொடர்பு எண் மின்னஞ்சல்
மதுரை மண்டலம் பொது மேலாளர்
91, பை பாஸ் சாலை,
TNSTC தலைமை அலுவலகம்,
மதுரை - 625010.
9487599021 tnstcmdu[at]gmail[dot]com
திண்டுக்கல் மண்டலம் பொது மேலாளர்
TNSTC திண்டுக்கல் மண்டல அலுவலகம்,
கலெக்டர் அலுவலகம்,
திண்டுக்கல் - 624004.
9487599101 tnstcdindigul[at]gmail[dot]com
விருதுநகர் மண்டலம் பொது மேலாளர்
TNSTC விருதுநகர் மண்டல அலுவலகம்
9487599131 tnstcvnr[at]gmail[dot]com

பேருந்து இயக்க பகுதி