அரசு பேருந்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள்

English Version

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் வரையறுக்கப்பட்டது

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (சேலம்) வரை, சேலம் தொடக்கத்தில் அண்ணா போக்குவரத்துக் கழகமாக 15.02.1973 அன்று சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களை இயக்க எல்லைகளாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இது 63 பேருந்துகளுடன் இயங்கத் தொடங்கியது, அதில் 45 பேருந்துகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையிலிருந்தும், 18 பேருந்துகள் முன்னாள் படைவீரர் கூட்டுறவு போக்குவரத்து சங்கத்திடமும் பெறப்பட்டு 5 கிளைகளுடன் ஆரம்பிக்கப்பட்டது.

அண்ணா போக்குவரத்து கழகம் படிப்படியாக தனது பேருந்துகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தி 22 கிளைகளுடன் 31.03.87 அன்று 995 பேருந்துகளை அடைந்தது. திரு.சி.ஆர்.பட்டாபிராமன் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், அண்ணா போக்குவரத்துக் கழகம் 01.04.87 முதல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட போக்குவரத்துக்கழகமானது, தருமபுரி மாவட்டத்தை இயக்க எல்லைகளாகக் கொண்டு அன்னை சத்யா போக்குவரத்துக்கழகம் வரை., என்ற பெயரில் தருமபுரியை தலைமையிடமாகக் கொண்டு தனது செயல்பாட்டைத் தொடங்கியது

1997 ஆம் ஆண்டில், அண்ணா போக்குவரத்து கழகம் வரை, சேலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (சேலம் பிரிவு-I) வரை., சேலம் என்றும், அன்னை சத்யா போக்குவரத்து கழகம் வரை, தருமபுரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (சேலம் பிரிவு-II) வரை., என்றும் மாற்றப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம். பிரிவு-II) வரை, தருமபுரியை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம் பிரிவு-I) வரை., சேலத்துடன் இணைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, இரு நிறுவனங்களும் அரசாணை எண்: 1478 E, தேதி: 30.12.2003, நிதி அமைச்சகம், இந்திய அரசின் நிறுவன விவகாரங்கள் துறையால் வெளியிடப்பட்டு, இந்திய அரசின் கெஜட் எண்: 1160, தேதி: 30.12.2003-ல் அறிவிக்கப்பட்டது.

ஒன்றிணைந்த பிறகு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம் பிரிவு I) வரை, சேலம் “தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம்) வரை, சேலம் என மறுபெயரிடப்பட்டது. மேலும் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களையும் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தின் சில பகுதிகளையும் அதன் இயக்க எல்லைகளாக கொண்டுள்ளது. இப்போது, ஒருங்கிணைந்த நிறுவனம், 2049 பேருந்துகள் மற்றும் 32 கிளைகளுடன், கூண்டு கட்டும் பிரிவு, டயர் புதுப்பித்தல் பிரிவு மற்றும் புதுப்பித்தல் பிரிவு ஆகியவற்றுடன் செயல்பட்டு வருகிறது.

பேருந்து எண்ணிக்கை

சேவைகளின் வகை பேருந்துகளின் எண்ணிக்கை
நகரம் 837
புறநகரம் 1038
மலை 25
உதிரி 149
மொத்தம் 2049

இயக்குநர்கள் குழு உறுப்பினர்கள்

திரு K பனீந்திர ரெட்டி இ.ஆ.ப அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்து துறை
போக்குவரத்து கழகங்களின் தலைவர்
திரு டி.என். வெங்கடேஷ். இ.ஆ.ப., அரசு சிறப்பு செயலர், போக்குவரத்து துறை
திரு பிரதில் தயல், இ.ஆ.ப., அரசு துணைச் செயலர், நிதித் துறை
திருமதி. ரீட்டா ஹரிஷ் தக்கர், இ.ஆ.ப., அரசு சிறப்புச் செயலர், நிதித் துறை
திரு வி.வெங்கடராஜன். எம்.காம், ஏ.சி.எம்.ஏ.,பி.ஜி.டி.எப்.எம்., இணை மேலாண் இயக்குநர் - த.போ.வ.நி.க
திரு எஸ். ஜோசப் டயஸ். பி.இ., மேலாண் இயக்குநர் - த.அ.போ.க. (விழுப்புரம்)
திரு.பி.திருவம்பலம்பிள்ளை பி.இ., எம்.எஸ்.சி., டி.பி.எம்., மேலாண் இயக்குநர் - த.அ.போ.க. (கோயம்புத்தூர்)
திரு.ஏ. ஆறுமுகம், பி.இ., எம்.பி.ஏ., மேலாண் இயக்குநர் - த.அ.போ.க. (மதுரை)
திரு எஸ்.எஸ். ராஜ்மோகன், பி.இ., மேலாண் இயக்குநர் - த.அ.போ.க. (கும்பகோணம்)
திரு. எஸ்.சுரேஷ், பி.இ., மேற்பார்வைப் பொறியாளர், நெடுஞ்சாலைத் துறை (இடமாற்றம்)
திரு.ஆர்.பொன்முடி, பி.இ.,எம்.பி.ஏ., டி.ஐ.எஸ்., டி.எல்.ஏ., மேலாண் இயக்குநர் - த.அ.போ.க. (சேலம்)
திரு எஸ்.ரகுநாதன், எப்.சி.ஏ. பட்டயக் கணக்காளர், தனி இயக்குநர்
திருமதி. பிரியா வேணுகோபால், எப்.சி.ஏ., டி.ஐ.எஸ்.ஏ., பட்டய கணக்காளர், பெண் இயக்குனர் மற்றும் தனி இயக்குநர்

தொடர்பு விபரங்கள்

மேலாண் இயக்குனர்
12, இராமகிருஷ்ணா ரோடு,
சேலம் - 636007
Contact : 0427-2314391-93
Email : tnstcsalem@gmail.com
மண்டல விவரங்கள்
மண்டலம் முகவரி தொடர்பு எண் மின்னஞ்சல்
தருமபுரி மண்டல அலுவலகம் பொது மேலாளர்
15-சி, சேலம் ரோடு, பாரதிபுரம்,
தருமபுரி - 636705
04342-230318-319-321 tnstcdpi9@gmail.com

பேருந்து இயக்க பகுதி