சோழன் போக்குவரத்துக் கழகம் என்ற பெயருடன் அழைக்கப்பட்ட, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது, இக்கழகம் 178 பேருந்துகளையும் 1500 பணியாளர்களையும் ஸ்ரீ ராம விலாஸ் பஸ் சர்வீஸ் லிமிடெட், மற்றும் ராமன் & ராமன் பிரைவேட் லிமிடெட்., என்கிற நிறுவனங்களிடமிருந்து பெற்று, பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடனும், கழக வளர்ச்சிக்கு வித்திடும் வகையிலும் சிறந்த முறையில் பேருந்து போக்குவரத்து வசதிகளை வழங்கி வருகின்றது .
படிப்படியாக 901 பேருந்துகளுடன் இக் கழகமானது வளர்ச்சி பெற்று 31.03.1985 அன்று இரண்டு தனித்தனி கழகங்களாக முறையே சோழன் போக்குவரத்துக் கழகம்., கும்பகோணம், கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு கழகமும் , தீரன் சின்னமலை போக்குவரத்துக் கழகம்., திருச்சி, திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு கழகமும் மொத்தம் இரு கழகங்களாக பிரிக்கப்பட்டது.
மேலும் 30.12.2003 அன்று, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த சோழன் போக்குவரத்து கழகம், திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த தீரன் சின்னமலை போக்குவரத்து கழகம் , காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த மருது பாண்டியர் போக்குவரத்து கழகம் மற்றும் புதுக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த வீரன் அழகு முத்துக்கோன் போக்குவரத்து கழகம் ஆகிய 4 போக்குவரத்து கழகங்களையும் உள்ளடக்கி ஒருங்கிணைக்கப்பட்டு தற்பொழுது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், கும்பகோணம் என்ற பெயருடன் இயக்கப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த கழகத்தில் கும்பகோணம், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் நாகப்பட்டினம் என ஆறு மண்டலங்கள் உள்ளன. ஆறு மண்டலங்களும் அந்தந்த மண்டல பொது மேலாளர்கள் தலைமையின் கீழ் வழிநடத்தப்படுகின்றன, ஓவ்வொரு மண்டலங்களிலும் வணிகம், தொழில்நுட்பம், இயக்கம், கணக்கு மற்றும் தணிக்கை போன்ற பிரிவுகள் தனித்தனி அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு மண்டல பொது மேலாளர் கீழ் செயல்பட்டு வருகிறது. கழக பேருந்துகளில் நாளொன்றுக்கு 27.46 லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றார்கள்.
மேலாண் இயக்குநர் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், கும்பகோணம் இயங்கி வருகிறது. கூட்டாண்மை அலுவலகம் எண் 27, புதிய ரயில் நிலைய சாலையில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது.
இக்கழக பேருந்துகள் 12 வருவாய் மாவட்டங்களிலும் மற்றும் பாண்டிச்சேரி, காரைக்கால் மாநிலங்களுக்கு இடையேயாகவும் இயக்கப்பட்டு வருகிறது. உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி திருத்தலம், உலக பாரம்பரிய நினைவுச்சின்னமான தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், ஸ்ரீரங்கம் கோயில் போன்ற முக்கிய ஸ்தளங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், பிரசித்தி பெற்ற நவக்கிரக ஸ்தளங்கள், சமயபுரம், சுவாமிமலை போன்ற புகழ்பெற்ற வழிபாட்டு ஸ்தளங்கள் இக்கழக இயக்கப் பகுதியில் அமைந்துள்ளதால், விழாக்கால நாட்களில் இந்த வழிப்பாட்டு தளங்களுக்கு சிறப்பு பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது.
சேவைகளின் வகை | பேருந்துகளின் எண்ணிக்கை |
---|---|
நகரம் | 1257 |
புறநகரம் | 1927 |
உதிரி | 254 |
மொத்தம் | 3438 |
K.பனீந்திர ரெட்டி இ.ஆ.ப. | அரசு முதன்மைச் செயலாளர், போக்குவரத்து துறை | |
திரு, T.N. வெங்கடேஷ். ஐ.ஏ.எஸ்., | அரசு சிறப்பு செயலர், போக்குவரத்து துறை | |
திரு.C.R. பாலாஜி | இணை இயக்குநர், நிதி (பிபிஇ) துறை | |
திரு.V.வெங்கடராஜன் எம்.காம், ஏ.சி.எம்.ஏ., பி.ஜி.டி.எப்.எம். | இணை நிர்வாக இயக்குனர் , டி.டி.எப்.சி | |
திரு.K. இளங்கோவன், பி.இ, பி.ஜி.டி.இ.எ | மேலாண் இயக்குனர் அவிபோக.(சென்னை) | |
திரு.S. ஜோசப்டயஸ். பி.இ., | மேலாண் இயக்குனர், த.அ.போ.க.விழுப்புரம் | |
திரு.P.திருவம்பலம்பிள்ளை பி.இ., எம்.எஸ்.சி., டி.பி.எம்., | மேலாண் இயக்குனர், த.அ.போ.க.-(கோயம்புத்தூர்) | |
திரு.R.பொன்முடி, பி.இ. ,எம்.பி.ஏ., டி.ஐ.எஸ்., டி.எல்.ஏ., | மேலாண் இயக்குனர் - த.அ.போ.க. (சேலம்) | |
திரு.R.மோகன், பி.இ., | மேலாண் இயக்குனர் - த.அ.போ.க. (திருநெல்வேலி) | |
திரு. A. ஆறுமுகம், பி.இ.,எம்.பி.ஏ., | மேலாண் இயக்குனர் த.அ.போ.க.- (மதுரை) | |
திரு S. ரகுநாதன், எப்.சி.ஏ. | பட்டயக் கணக்காளர், தனி இயக்குனர் | |
திருமதி. கவிதா குலாச்சா | பெண் தனி இயக்குனர் | |
திரு R.கிருஷ்ணசாமி | மேற்பார்வை பொறியாளர் | |
திரு.S.S.ராஜ்மோகன், பி.இ., | மேலாண் இயக்குனர் -த.அ.போ.க. (கும்பகோணம்) |
மண்டலம் | முகவரி | தொடர்பு எண் | மின்னஞ்சல் |
---|---|---|---|
கும்பகோணம் மண்டலம் | பொது மேலாளர் 27, புகைவண்டி நிலைய புதுச்சாலை, கும்பகோணம். தஞ்சாவூர்-612 001 |
0435-2400352 | tnstcgmkum[at]gmail[dot]com |
நாகப்பட்டிணம் மண்டலம் | பொது மேலாளர் 140. பப்ளிக் ஆபீஸ் ரோடு, வெளிப்பாளையம், நாகப்பட்டினம் – 611 001 |
04365-249275 | tnstcngt[at]gmail[dot]com |
திருச்சி மண்டலம் | பொது மேலாளர் பெரியமிளகுபாறை, கலெக்டர் ஆபீஸ் ரோடு, திருச்சி – 620 001. |
0431-2415551-54 | tnstctry[at]gmail[dot]com |
கரூர் மண்டலம் | பொது மேலாளர் திருமாநிலையூர் அஞ்சல் , கரூர் – 639 003 |
04324-256783 | tnstckrr[at]gmail[dot]com |
காரைக்குடி மண்டலம் | பொது மேலாளர் மருதுபதி கோவிலூர் ரோடு, மானசிர் அஞ்சல், காரைக்குடி 630 307. |
04565 -234125-26 | tnstckkd[at]gmail[dot]com |
புதுக்கோட்டை மண்டலம் | பொது மேலாளர் 51/1, பிள்ளை தண்ணீர் பந்தல், மதுரை மெயின் ரோடு, புதுக்கோட்டை – 622 001. |
04322 -266111 | tnstcpdk[at]gmail[dot]com |