1975-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தந்தை பெரியார் போக்குவரத்துக் கழகம் 16.01.1975ல் 172 பேருந்துகளை கொண்டு செயல்பட தொடங்கியது. அப்பொழுது வட ஆற்காடு, தென்னாற்காடு மற்றும் புதுவை மாநில பொது மக்களுக்கு திறமையாகவும், சிக்கனமாகவும், ஒருங்கிணைந்த வகையிலும் போக்குவரத்து வசதியினை அளித்திடும் வகையில் இது உருவாக்கப்பட்டது.
1983-ம் ஆண்டில் இப்போக்குவரத்துக் கழகத்தில் இருந்து பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்துக் கழகம் மற்றும் 1992-ம் ஆண்டில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை அழகிரி போக்குவரத்துக் கழகம் உருவாகும் போது இக்கழகத்தின் பேருந்துகளின் எண்ணிக்கை 492 ஆகவும், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் போக்குவரத்துக் கழகம் உருவாகும் போது இக்கழகத்தின் பேருந்துகளின் எண்ணிக்கை 1062 ஆகவும் இருந்தது.
இம்மூன்று போக்குவரத்துக் கழகங்களும் 30.12.2003-ல் ஒருங்கிணைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) என்ற பெயரில் விழுப்புரத்தை தலைமை அலுவலகமாக கொண்டு விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் மண்டலங்கள் இயங்கின, மேலும் திருவண்ணாமலை மண்டலம் 22.,01,2007 அன்றும் கடலூர் மற்றும் திருவள்ளூர் மண்டலங்கள் 04.08.2022 அன்றும் புதிய மண்டலங்களாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளின் எண்ணிக்கை 31.07.2022-ன்படி 3287 ஆகும்.
தற்போது இப்போக்குவரத்துக் கழகம் விழுப்புரம், கள்ளகுறிச்சி, கடலூர், வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கற்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள், புதுவை யூனியன் பிரதேசம் மற்றும் அதனை சார்ந்த சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் தினசரி பயன்பாட்டிற்காக பேருந்து வசதியினை அளித்து வருகிறது.
சேவைகளின் வகை | பேருந்துகளின் எண்ணிக்கை |
---|---|
நகரம் | 1036 |
புறநகரம் | 1955 |
மலை | 29 |
உதிரி | 267 |
மொத்தம் | 3287 |
K.பனீந்திர ரெட்டி இ.ஆ.ப. | அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்து துறை | |
திரு T.N. வெங்கடேஷ் I.A.S, | அரசு தனி செயலாளர், போக்குவரத்து துறை | |
திரு பிரதிக் தயாள் I.A.S, | அரசு துணை செயலாளர், நிதி துறை | |
திரு V.வெங்கடராஜன் M.com, ACMA., PGDFM, | இணை நிர்வாக இயக்குநர் – போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் | |
திரு A.அன்பு ஆபிரகாம் B.Tech, | மேலாண் இயக்குநர் – மாநகர போக்குவரத்துக் கழகம், சென்னை | |
திரு K.இளங்கோவன் B.E., PGDEA, | மேலாண் இயக்குநர் – அரசு விரைவு போக்குவரத்துக் கழகம், சென்னை | |
திரு S.S.ராஜ்மோகன் B.E., | மேலாண் இயக்குநர் – கும்பகோணம். | |
திரு R.பொன்முடி B.E, M.B.A, D.I.S, D.L.A, | மேலாண் இயக்குநர் – சேலம். | |
திரு K.G.சத்யபிரகாஷ் | கண்காணிப்பு பொறியாளர், நெடுஞ்சாலை துறை | |
திரு I.ராஜேஷ் | தனி இயக்குநர் | |
திருமதி கவிதா குலாச்சா | மகளிர் மற்றும் தனி இயக்குநர் | |
திரு S.ஜோசப் டயாஸ் | மேலாண் இயக்குநர் – விழுப்புரம் |
மண்டலம் | முகவரி | தொடர்பு எண் | மின்னஞ்சல் |
---|---|---|---|
மண்டல அலுவலகம் - விழுப்புரம் | பொது மேலாளர் 3/137, சாலா மேடு, வழுதரெட்டி அஞ்சல், அஞ்சல் பெட்டி எண் 56, விழுப்புரம்-605 602 | 04146 - 259256 - 60 | vpmtnstc[at]gmail[dot]com |
மண்டல அலுவலகம் - கடலூர் | பொது மேலாளர் இம்பிரீயல் ரோடு, (சிதம்பரம் ரோடு), கடலுர் – 607 002 | 04142 - 224229 | tnstcvpmcdr[at]gmail[dot]com |
மண்டல அலுவலகம் - திருவண்ணாமலை | பொது மேலாளர் மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைந்த வளாகம், அரசு மருத்துவ கல்லூரி எதிரில், சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை, வேங்கிகால் கிராமம், திருவண்ணாமலை-606 604 | 04175 - 232390 | tvmtnstc[at]gmail[dot]com |
மண்டல அலுவலகம் - வேலூர் | பொது மேலாளர் நெ-9, ஆற்காடு ரோடு, ரங்காபுரம், வேலூர் – 632 009 | 0416 - 2252681 - 83 | vlrtnstc[at]gmail[dot]com |
மண்டல அலுவலகம் - காஞ்சிபுரம் | பொது மேலாளர் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலை, காரபேட்டை கிராமம், காஞ்சிபுரம் – 602 001 | 044 - 27277303,304,307 | tnstckpm[at]gmail[dot]com |
மண்டல அலுவலகம் - திருவள்ளூர் | பொது மேலாளர் நெ-356, ஜவஹர்லால் நேரு ரோடு, திருவள்ளூர் – 602 001 | 044 - 27660270 | tnstctvl[at]gmail[dot]com |