அரசு பேருந்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள்

English Version

மாநகர போக்குவரத்து கழகம் வரையறுக்கப்பட்டது

எங்களை பற்றி
மாநகர் போக்குவரத்துக் கழகம் [சென்னை] வரையறுக்கப்பட்டது என்பது நிறுவனங்கள் சட்டம், 1956 இன் கீழ் பதிவுசெய்யப்பட்ட தமிழ்நாடு அரசு நிறுவனமாகும். இது தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட இயக்குநர்கள் குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. சென்னை மாநகரில் பொது போக்குவரத்து 100% தேசியமயமாக்கப்பட்டுள்ளது. மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை மாநகர்ப் பகுதி முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது, இதின்இயக்க எல்லை 3929 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு ஆகும்.

வரலாறு
இந்தியா சுதந்திர அடைந்த பின்னர், 1947 - ல் சென்னை மாநகரத்தில் தனியார் பயணிகள் பேருந்து போக்குவரத்து நடைபெற்ற காலத்தில், 30 பேருந்துகளை அரசுத்துறை சார்ந்த அமைப்பின் கீழ் இயக்குவதற்கு அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. பேருந்து போக்குவரத்து சென்னை மாநில போக்குவரத்து துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது.

1972 ஆம் ஆண்டில், சமூகப் பொறுப்புகளை தியாகம் செய்யாமல் வணிக அணுகுமுறையை புகுத்துவதற்காக போக்குவரத்து துறை அமைப்பு ஒரு நிறுவன அமைப்பாக மாற்றப்பட்டது. பல்லவன் போக்குவரத்து கழகம் வரையறுக்கப்பட்டது, கம்பெனி சட்டம் 1956ன் கீழ், தமிழ்நாடு அரசால் 01.01.1972 அன்று உருவாக்கபட்டு 1029 பேருந்துகளைக் கொண்டு இயக்கப்பட்டது.

பொதுமக்களின் தேவைகளுக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து 01.01.1994 அன்று 2332ஐ எட்டியது. பேருந்துகள் எண்ணிக்கை அதிகரித்ததால் பேருந்து இயக்குதலில் உள்ள சிரமங்களை எளிதாக்கவும், பேருந்து இயக்கத்தினை மேம்படுத்திடவும் பல்லவன் போக்குவரத்துக் கழகத்தினை தமிழ்நாடு அரசு இரண்டாக பிரித்து, ஓர் புதிய போக்குவரத்துக் கழகம் டாக்டர் அம்பேத்கார் போக்குவரத்துக் கழகம் என பெயரிடப்பட்டு 19.01.1994 முதல் உருவாக்கப்பட்டது.

சென்னை மாநகரில் உள்ள ஈ.வெ.ரா ராமசாமி சாலையின் தெற்குபுறப் பகுதிகள் பல்லவன் போக்குவரத்துக் கழக இயக்கப் பகுதியில் வந்தது. சென்னை மாநகரில் உள்ள ஈ.வெ.ராமசாமி சாலையின் வடக்குபுறப் பகுதிகள் (ஈ.வெ.ரா. பெரியார் சாலை உட்பட) டாக்டர் அம்பேத்கார் போக்குவரத்துக் கழகத்தின் இயக்கப் பகுதிகளுக்குள் வந்தது.

பல்லவன் போக்குவரத்துக் கழகம் மற்றும் டாக்டர் அம்பேத்கார் போக்குவரத்துக் கழகம் இணைக்கப்பட்டு ஒருங்கினைந்த மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) வரையறுக்கப்பட்டது என்ற பெயரில் 10.01.2001 முதல் செயல்பாட்டினை தொடங்கி செயல்பட்டு வருகிறது.

பேருந்து எண்ணிக்கை

சேவைகளின் வகை பேருந்துகளின் எண்ணிக்கை
நகரம் 3233
உதிரி 215
மொத்தம் 3448

இயக்குநர்கள் குழு உறுப்பினர்கள்

K.பனீந்திர ரெட்டி இ.ஆ.ப. அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்து துறை
திரு ககன்தீப் சிங் பேடி ஐ.ஏ.எஸ்., முதன்மை செயலாளர்/ ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி
திரு அன்ஷுல் மிஸ்ரா ஐ.ஏ.எஸ்., உறுப்பினர் செயலாளர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்
திரு ககாரியா உஷா ஐ.ஏ.எஸ்., அரசு முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித் துறை
திரு சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ்., கூடுதல் காவல்துறை இயக்குநர் / காவல்துறை ஆணையர், பெருநகர சென்னை போலீஸ்
திரு பிரசாந்த் எம். வட்னேரே ஐ.ஏ.எஸ்., அரசு கூடுதல் செயலாளர், நிதி துறை (பிபீஇ.)
திரு டி.யன்.வெங்கடேஷ் ஐ.ஏ.எஸ்., அரசு சிறப்பு செயலர், போக்குவரத்து துறை
திரு ஆர்.விஸ்வநாத் பி.இ., தலைமைப் பொறியாளர் (கட்டிடங்கள்)
திரு கே. இளங்கோவன் பி.இ., பிஜிடிஇஏ., மேலாண் இயக்குனர், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம்
திரு எஸ்.ரெங்கநாதன் பி.இ., இயக்குனர், சாலை போக்குவரத்து நிறுவனம்
திரு S. ஜோசப் டயஸ் பி.இ., எம்.எஸ்சி., மேலாண் இயக்குனர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) வரையறுக்கப்பட்டது
திரு V. அமுதன் பி.இ., எம்.எஸ்., பிஎச்.டி., தனி இயக்குனர்
பிரியா வேணுகோபால் எப்சிஏ., டிஐஎஸ்ஏ., தனி இயக்குனர் மற்றும் பெண் இயக்குனர்
திரு ஏ. அன்பு ஆபிரகாம் பி.டெக்., மேலாண் இயக்குனர், மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) வரையறுக்கப்பட்டது
திரு V. வெங்கடராஜன் எம்.காம்., ஏசிஎம்ஏ., பிஜிடிஎப்எம்., தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதிக் கழகம் வரையறுக்கப்பட்டது
திரு K.தசரதன் B.E., மேலாண் இயக்குநர் -PTCS

தொடர்பு விபரங்கள்

மேலாண் இயக்குநர் எண். 2, பல்லவன் சாலை, சென்னை - 600 002.
Contact : 044-23455858 - 859
Email : edp.mtc[at]tn[dot]gov[dot]in

பேருந்து இயக்க பகுதி