1. தமிழக அரசின் போக்குவரத்துத் தொழிலை நாட்டுமையாக்குவது என்ற கொள்கையின் அடிப்படையில் சேரன் போக்குவரத்துக் கழகம் ஒரு போக்குவரத்து நிறுவனம் என கம்பனிச் சட்டத்தின் கீழ் 17.02.1972 அன்று பதிவு செய்யப்பட்டது. பொள்ளாச்சியில் திருவாள்ர் ஆனைமலை பஸ் டிரான்ஸ்போர்ட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திடமிருந்து 109 பேருந்துகளை கையகப்படுத்தி இக்கழகத்திடம் ஒப்படைத்த பிறகு 01.03.1972 முதல் இப்போக்குவரத்துக் கழகம் தன் பணியை கோவை மாவட்டத்தில் துவக்கியது. தமிழக அரசின் ‘தமிழ்நாடு’ நிலை ஊர்திகள் மற்றும் ஒப்பந்த ஊர்திகள் (கையகப்படுத்துதல்) சட்டம் 1973ன் படி, நீலகிரி மாவட்டத்தில் 19 தனியார் நிறுவனங்கள் இயக்கி வந்த 121 பேருந்துகளை கையகப்படுத்தி இக்கழகத்திடம் 14.01.1973 முதல் ஒப்படைக்கப்பட்டது.
2. சேரன் போக்குவரத்துக் கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு 01.04.1983 முதல் “ஜீவா போக்குவரத்துக் கழகம்”, 317 பேருந்துகளுடன் துவக்கப்பட்டது.
3. சேரன் போக்குவரத்துக் கழகம் மீண்டும் ஒருமுறை, இரண்டாம் முறையாக 18.02.1994 அன்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு “மகாகவி பாரதியார் போக்குவரத்துக் கழகம் லிமிடெட்., உதகமண்டலம்” என்ற புதிய போக்குவரத்துக் கழகம், நீலகிரி மாவட்டத்தில் உதகையை தலைமையிடமாகக் கொண்டு 367 பேருந்துகளுடன் துவக்கப்பட்டது.
4. பொள்ளாச்சியில் பேருந்து கூண்டு கட்டுமானப் பணியை கொண்டு இயக்கி வந்த முந்தைய சேரன் இஞ்ஜீனியரிங் கார்பொரேசன் லிமிடெட்.. பொள்ளாச்சி 01.04.1996 முதல் சேரன் போக்குவரத்துக் கழகம் லிமிடெட்., கோவையுடன் இணைக்கப்பட்டது.
5. தமிழ்நாடு அரசு உத்திரவின்படி. 23.07.1997 முதல் சேரன் போக்குவரத்துக் கழகம் லிமிடெட்., கோயமுத்தூர் என்பது “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம் –I) லிமிடெட் கோயம்புத்துர் என்றும் ”ஜீவா போக்குவரத்துக் கழகம் லிமிடெட்., ஈரோடு” என்பது ”தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ( கோவை கோட்டம் -II) லிமிடெட்., ஈரோடு” என்றும் ”மகாகவி பாரதியர் போக்குவரத்துக் கழகம் லிமிடெட்., உதகமண்டலம்” என்பது ”தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம் - III) லிமிடெட்., உதகமண்டலம்” என்றும் பெயர் மாற்றம் செய்யப்பாட்டது.
6. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ( கோவை கோட்டம் -III) லிமிடெட்., உதகமண்டலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ( கோவை கோட்டம் -I ) லிமிடெட்., கோவையுடன் 07.11.2000 முதல் இனைக்கப்பட்டது,
7. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம் – II) ஈரோட, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை கோட்டம் – I) லிமிடெட்., கோவையுடன் 30.12.2003 முதல் இணைக்கப்பட்டு. தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோவை) லிமிடெட்., கோயமுத்தூர் என இயக்கி வருகிறது. இப் போக்குவரத்துக் கழகத்தின்கீழ் கோயமுத்தூர், ஈரோடு, திருப்புர் மற்றும் உதகை ஆகிய மண்டலங்கள் உள்ளன.
சேவைகளின் வகை | பேருந்துகளின் எண்ணிக்கை |
---|---|
நகரம் | 1171 |
புறநகரம் | 1034 |
மலை | 354 |
உதிரி | 215 |
மொத்தம் | 2774 |
K.பனீந்திர ரெட்டி இ.ஆ.ப. | அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்து துறை போக்குவரத்து கழகங்களின் தலைவர் |
|
திரு டி.என்.வெங்கடேஷ், IAS., | அரசின் சிறப்பு செயலாளர், போக்குவரத்து துறை | |
திருமதி லக்ஷ்மி பவ்யா தனிரு, IAS., | அரசு துணை செயலாளர், நிதி துறை | |
திரு M.பிரதாப், IAS., | ஆணையர்(கோவை மாநகராட்சி) | |
திரு V.வெங்கடராஜன் | இணை மேலாண் இயக்குனர் -TDFC | |
திரு K.இளங்கோவன் | மேலாண் இயக்குனர்அரசு விரைவு போக்குவரத்து கழகம் | |
திரு.A.அன்பு ஆப்ரகாம் | மேலாண் இயக்குனர் - பெருநகர போக்குவரத்து கழகம் சென்னை | |
திரு R.பொன்முடி | மேலாண் இயக்குனர் - சேலம் | |
திரு.A.ஆறுமுகம் | மேலாண் இயக்குனர் - மதுரை | |
திரு R.மோகன் | மேலாண் இயக்குனர் - திருநெல்வேலி | |
திரு S.S.ராஜ்மோகன் | மேலாண் இயக்குனர் - கும்பகோணம் | |
திரு J.கண்ணன் | கண்காணிப்பு பொறியாளர் - நெடுஞ்சாலை துறை | |
திருமதி பிரியா வேணுகோபால், FCA., DISA | பெண் இயக்குனர் மற்றும் தனி இயக்குனர் | |
M. கணேசன், B.SC., FCA., | தனி இயக்குனர் | |
திரு P.திருவம்பலம் பிள்ளை | மேலாண் இயக்குனர் - கோயம்புத்தூர் |
மண்டலம் | முகவரி | தொடர்பு எண் | மின்னஞ்சல் |
---|---|---|---|
கோவை மண்டலம் | பொது மேலாளர் 37, மேட்டுப்பாளையம் சாலை, கோயமுத்தூர்-641 043 |
0422- 2431182 | tnstccbecgmpc[at]gmail[dot]com |
ஈரோடு மண்டலம் | பொது மேலாளர் 45, சென்னிமலைரோடு, ஈரோடு 638 001. |
0424 - 2275655 | erdtnstc[at]gmail[dot]com |
திருப்பூர் மண்டலம் | பொது மேலாளர் சிடிசி டெப்போ, காங்கயம் ரோடு, திருப்பூர் 641 603. |
0421 - 2422424 | tnstctprro[at]gmail[dot]com |
உதகை மண்டலம் | பொது மேலாளர் உதகை பேருந்து நிலையம், உதகை 643 043 |
0423-2441260 | ootygm[at]gmail[dot]com |