தமிழக அரசு 1975ம் ஆண்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களை இணைக்கும் பொருட்டு தொலை தூர பயணத்திற்காக ஓர் போக்குவரத்துக் கழகம் நிறுவ முடிவு செய்து, வேறெந்த போக்குவரத்துக் கழகத்திலும் இல்லாதவாறு தொலைதூர இயக்கத்திற்காக பல்லவன் போக்குவரத்துக் கழகத்தின் ஒரு அங்கமாக 1975ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் துவக்கப்பட்டது.
பின்பு 1980ம் ஆண்டு ஜனவரி 16ம் நாள் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகமாக பதிவு செய்யப்பட்டு 276 பேருந்துகளுடன் தனி நிறுவனமாக செயல்படத் துவங்கியது.
திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் இரண்டாக பிரிக்கப்பட்டு வெளிமாநில இயக்கங்களுக்காக தனியாக புரட்சி தலைவி டாக்டர் ஜெ.ஜெயலலிதா போக்குவரத்து கழகம் 27.01.1994 அன்று ஆரம்பிக்கப்பட்டது. பிறகு இதை ராஜீவ் காந்தி போக்குவரத்து கழகம் என 21 மே 1996 மாற்றம் செய்யப்பட்டது.
17.07.1997 முதல் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் கோட்டம் 1 எனவும் 30.07.1997 முதல் வெளிமாநில இயக்கங்களுக்காக உருவாக்கப் பெற்ற போக்குவரத்துக் கழகம் அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் கோட்டம் 2 எனவும் மாற்றம் செய்யப்பட்டது.
பின்பு அரசு விரைவு போக்குவரத்து கழகம் (தமிழ்நாடு பிரிவு II)
அரசு விரைவு போக்குவரத்து கழகம் (தமிழ்நாடு பிரிவு I) லிமிடெட் உடன் பிப்ரவரி 07, 2002 முதல் இணைக்கப்பட்டு
தற்போது " அரசு விரைவு போக்குவரத்து கழகம் தமிழ்நாடு லிமிடெட்" ஆக செயல்படுகிறது
அரசு விரைவு போக்குவரத்து கழகம் தமிழ்நாடு லிமிடெட் பயணிக்கும் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், சிறந்த வசதி, பாதுகாப்பான, விரைவான மற்றும் நம்பகமான சேவையை வழங்குவதற்கும் தனது சேவையை மேம்படுத்த பல பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த கழகம் மூலம் இயக்கப்படும் சேவைகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 1109 பேருந்துகள் 22 பணிமனைகள் மூலம் இயக்கப்படுகின்றன. அவற்றில் அதிநவீன மிதவை பேருந்து, குளிர்சாதன பேருந்து, குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்து, குளிர்சாதன படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து, குளிர்சாதனமில்லா படுக்கை வசதி கொண்ட பேருந்து, குளிர்சாதனமில்லா படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட பேருந்து மற்றும் கழிப்பறை வசதி மற்றும் உணவகப் பேருந்து போன்ற பேருந்துகள் அடங்கும்.
அரசு விரைவு போக்குவரத்து கழகம் தமிழ்நாடு லிமிடெட் அனைத்து முக்கிய தலைநகரங்கள், வரலாற்று, மத மற்றும் வணிக இடங்கள் போன்றவற்றை இணைக்கும் தொலைதூர விரைவு சேவைகளை தமிழ்நாடு முழுவதும் இயக்குகிறது.
ஆந்திரம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களான அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் 251 வழித்தடங்களை இயக்கி வருகிறது. அதில் அண்டை மாநிலங்களுக்கு 112 வழித்தடங்களும் தமிழ் நாட்டின் உட்பகுதிகளுக்கு 139 வழிதடங்களும் இயக்கப்படுகின்றன.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தனது மிகச் சிறந்த சேவைகள் மற்றும் சிறந்த செயல்பாட்டினாலும் வாகன உற்பத்தித்திறன், டயர் செயல்திறன் மற்றும் குறைந்தபட்ச செயல்பாட்டுச் செலவு போன்ற பல பிரிவுகளில் தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளது,
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு லிமிடெட் தனது சேவையினால் தமிழ்நாடு மற்றும் அதன் அண்டை மாநில மக்களால் மிகவும் விரும்பப்படும் போக்குவரத்து கழகமாக மாறியுள்ளது,
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு லிமிடெட் –ன் மிகச்சிறந்த நோக்கம், அதன் அன்றாட நடவடிக்கைகளில் திறமையாக செயல்படுவது மற்றும் நீண்ட தூர பயணிகளின் தேவைகளை சிறந்த முறையில் கொண்டு வருவது.
சேவைகளின் வகை | பேருந்துகளின் எண்ணிக்கை |
---|---|
விரைவு | 1000 |
உதிரி | 105 |
மொத்தம் | 1105 |
திரு K.பனீந்திர ரெட்டி இ.ஆ.ப. | அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்து துறை<br>போக்குவரத்து கழகங்களின் | |
திருமதி ஆர். லில்லி, ஐ.ஏ.எஸ்., | அரசு சிறப்பு செயலாளர், போக்குவரத்து துறை | |
டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஐ.ஏ.எஸ்., | மேலாண் இயக்குநர், மாநகர் போக்குவரத்துக் கழகம் சென்னை | |
திரு சி.ஆர்.பாலாஜி, பி.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.பி.ஏ., ஏ.சி.எம்.ஏ, ஏ.சி.எஸ் | கூடுதல் இயக்குநர் மற்றும் அரசாங்கத்தின் முன்னாள் இணைச் செயலாளர் - நிதித் துறை | |
திரு. எம்.பன்னீர்செல்வம், பி.இ., | தலைமை பொறியாளர்-தேசிய நெடுஞ்சாலை | |
திரு. வி.வெங்கடராஜன், எம்.காம்., ஏ.சி.எம்.ஏ., பி.ஜி.டி.எஃப்.எம்., | இணை மேலாண் இயக்குநர்-TDFC | |
திரு எஸ். ஜோசப் டயாஸ், பி.இ., எம். எஸ்.சி | மேலாண் இயக்குநர்-சேலம் | |
திரு. ஆர்.பொன்முடி, பி.இ., எம்.பி.ஏ., டி.ஐ.எஸ்., டி.எல்.ஏ., | மேலாண் இயக்குநர்-கும்பகோணம் | |
திரு கே. தசரதன், பி.இ., | மேலாண் இயக்குநர் - திருநெல்வேலி | |
திரு.கே.குணசேகரன், பி.இ., | மேலாண் இயக்குநர்-விழுப்புரம் | |
திரு ஆர். சிங்காரவேலு, பி.இ., | மேலாண் இயக்குநர்-மதுரை | |
திரு ஜி.செல்வன், பி.இ., | மேலாண் இயக்குநர்-கோயம்புத்தூர் | |
திருமதி பிரியா வேணுகோபால், எப்.சி.ஏ., டி.ஐ.எஸ்.ஏ., | பட்டய கணக்காளர்- தன்னாண்மை மற்றும் பெண் இயக்குநர் | |
திரு ஐ. ராஜேஷ், பி.காம்., எப்.சி.ஏ. | பட்டய கணக்காளர்-தன்னாண்மை இயக்குநர் | |
திரு ஆர். மோகன், பி.இ., எம்.பி.ஏ., | மேலாண் இயக்குநர்-SETC |
மண்டலம் | முகவரி | தொடர்பு எண் | மின்னஞ்சல் |
---|---|---|---|
கூட்டாண்மை | பொது மேலாளர் (தொழில்நுட்பம்), திருவள்ளூர் இல்லம், எண்., 2 பல்லவன் சாலை, சென்னை - 600 002 | 044-25366631 | tnexpress16[at]gmail[dot]com |
கூட்டாண்மை | பொது மேலாளர் (O), திருவள்ளூர் இல்லம், எண்., 2 பல்லவன் சாலை, சென்னை - 600 002 | 044-25388881 | tnexpress16[at]gmail[dot]com |
கூட்டாண்மை | முதுநிலை துணை மேலாளர் (HRD), திருவள்ளூர் இல்லம், எண்., 2 பல்லவன் சாலை, சென்னை - 600 002 | 044-29996303 | tnexpress16[at]gmail[dot]com |